ரூ.10,000 கோடி மோசடி: மல்லையாவுக்கு செக் வைத்தது இங்கிலாந்து நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 10:27 pm


தொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்திய வங்கிகள் தொடுத்த ரூ.10,000 கோடி மோசடி வழக்கில், அவருக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கி,  அதை திருப்பிக் கொடுக்காமல், இங்கிலாந்து தப்பித்து சென்றார். அவருக்கு எதிராக வழக்கு தொடுத்த வங்கிகள், அவரின் சொத்துக்களை முடக்க கோரின. கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கில், அவரின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டன.

வங்கிகள் தன மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் மல்லையா தொடுத்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் துவங்கியது. இன்று இதில் தீர்ப்பளித்த லண்டன் நீதிபதி, மல்லையாவின் சொத்துக்களை முடக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தடை செய்ய மறுத்துவிட்டார். அவரிடம் இருந்து தாங்கள் கொடுத்த கடனை திருப்பி வாங்கும் நடவடிக்கைகளை குறிப்பிட்ட வங்கிகள் தொடங்கலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார். உலகம் முழுவதும் மல்லையாவின் சொத்துக்களை முடக்க போடப்பட்ட உத்தரவையும் தடை செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டியுள்ள நிலையில், இந்த உத்தரவு பாரதிய ஜனதாவுக்கு சாதகமாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close