மகனின் திருமணத்தில் கலந்துகொள்ள லாலுவுக்கு 5 நாட்கள் பரோல்!

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 12:09 pm


மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறைத்தண்டனை பெற்று வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்-க்கு 5 நாட்கள் பரோல் வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த சமயத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக அரசின் கருவூலத்தில் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நான்கு வழக்குகளில் தீர்ப்பு வெளியாகிவிட்டது.

அதன்படி முதல் நான்கு வழக்குகளில் முறையே அவர் 5 ஆண்டுகள், 3.5 ஆண்டுகள் , 5 ஆண்டுகள், 14 ஆண்டுகள் என 27.5 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ளார். ஜார்கண்ட் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து அவர் தனது மகன் தேஜ் பிரதாப் யாதவ்- வின் திருமணம் மே 12ம் தேதி நடைபெற இருப்பதால் 5 நாட்கள் பரோல் வேண்டும் என ஜார்கண்ட் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதன்படி, அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லாலுவுக்கு 5 நாட்கள் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர் ஜாமின் கோரிய மனுவை ஜார்கண்ட் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close