திருநங்கைகள் பான் அட்டை பெற பாலினச் சான்று அளிக்கத் தேவையில்லை!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 05:09 pm


பான் அட்டை பெறுவதற்காக திருநங்கைகள் பாலினச் சான்று அளிக்க வேண்டிய அவசியமில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வரி செலுத்துதல், வங்கிக்கணக்கில் இருந்து பணம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு மத்திய வருமானவரித்துறையினாரால் 10 எண்கள் அடங்கிய பான் அட்டை வழங்கப்படுகிறது. பான் அட்டை கோரும் முந்தைய விண்ணப்பத்தில் ஆண், பெண் என்ற இரு பாலினம் இருந்தது. இதையடுத்து ஆதாருடன் இணைக்க தங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரு பிரிவு வேண்டும் என திருநங்கைகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 10ம் தேதி திருநங்கைகளுக்கு 'மூன்றாம் பாலினம்' என்ற  பிரிவு ஒதுக்கப்பட்டது.  இதற்காக, வருமான வரித்துறை விதிகளில் மத்திய நேரடி வரிகள் வாரியம் திருத்தம் செய்தது.

இதைதொடர்ந்து தற்போது, பான் அட்டைக்காக மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்திற்கான ஆவணத்தை இணைக்கத் தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக பான் எண் பெற விண்ணப்பிப்பவர்கள், மற்றும் ஏற்கனவே பான் அட்டை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close