சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதியுங்கள்: முதல்வருக்கு கடிதம் எழுதிய காவலர்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 06:40 pm


மும்பையைச் சேர்ந்த காவலர் ஒருவர், சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த காவலர் தியானேஷ்வர் அகிர்ரா என்பவர் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கடந்த மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது மனைவி உடல்நிலை மீண்டும் மோசமான நிலையிலே இருந்ததால் மார்ச் 28ம் தேதி வரை விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அம்மாநில காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவருக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், "எனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்கு மருத்துவச் செலவுகள் உள்ளது. மேலும் எனது குடும்பச் செலவுகளையும் சமாளிக்க வேண்டும். நான் அதிக நாட்கள் விடுமுறை எடுத்ததன் காரணமாக எனக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே காவல்துறை சீருடையுடன் என்னை பிச்சை எடுக்க அனுமதியுங்கள்" என மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close