பொதுப்பணித்துறை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலின் உறவினர் கைது

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 05:52 pm


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர், வினய் பன்சால், அம்மாநில  பொதுப்பணித்துறையில் நடந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என கூறி, ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் விடுத்துள்ளது.

மறைந்த கெஜ்ரிவாலின் உறவினர் சுரேந்தர் பன்சாலின் மகன் வினய் பன்சால். இவர் கெஜ்ரிவாலுக்கு மருமகன் முறையாம். தனது தந்தை நடத்தி வந்த கட்டுமான பணிகள் நிறுவனத்தை தற்போது வினய் நடத்தி வருகிறார். பொதுப்பணித்துறையின் கான்ட்ராக்டை அந்த நிறுவனம் பெற்ற நிலையில், அதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பொதுப்பணித்துறை வேலைகளுக்காக அந்நிறுவனம் லெட்டர் பேட் நிறுவனங்களிடம் இருந்து இரும்பு, சிமெண்ட் போன்ற பொருட்களை வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "8ம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. வினய் பன்சாலின் நிறுவனம், பொதுப்பணித்துறைக்காக வாங்கிய பொருட்கள் தரமானதாக இல்லை என புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரித்த போது, மஹாதேயோ இம்பாக்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து இரும்பு மற்றும் சிமெண்ட் பொருட்களை அவர்கள் வாங்கியது தெரிய வந்தது. கூடுதல் விசாரணையில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என தெரிய வந்தது. இதுகுறித்து சரியான ஆவணங்களை அவர் சமர்பிக்காததால், வினய் கைது செய்யப்பட்டுள்ளார்" என லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு கமிஷனர் அரவிந்த் தீப் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close