ஆதார் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 08:54 pm


ஆதார் அட்டைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை இன்று ஒத்திவைத்தது.

மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் அடையாள அட்டையில் பொதுமக்களின் கைரேகை, கருவிழி அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் சுமார் நூறு கோடி இந்தியர்களிடம் இருந்து  பெறப்பட்டது. அந்த அட்டையை மொபைல் எண், வாங்கி கணக்கு, பான் கார்டு, உள்ளிட்டவற்றுடன் இணைக்கவும்,  பல அரசு சேவைகளுக்கு அதை கட்டாயமாக்கியும் மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து, ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இல்லையென்றும், அதை பலர் தவறாக பயன்படுத்தவும்,  திருடவும் வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆதார் அட்டையை, அடிப்படை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்கியதை எதிர்த்தும், அது அரசியல் சாசனப்படி செல்லுமா என்பது குறித்தும் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இதை விசாரிக்க, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு, இன்று அந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே இது தான் மிக நீளமாக நடந்துள்ள வழக்கு விசாரணையாம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வருமென்றும், அது தங்களுக்கு ஆதரவான தீர்ப்பாக இருக்கும் என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close