2 நாள் சுற்றுப்பயணமாக இன்று நேபாளம் செல்கிறார் மோடி

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 10:26 am

2 நாள் அரசு முறை பயணமாக நரேந்திர மோடி இன்று நேபாளம் செல்கிறார். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் என்று மோடி கூறினார். 

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று நோபாளம் செல்கிறார். நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அழைப்பை ஏற்று அங்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேபாளத்தின் ஜனக்பூருக்கு செல்லும் மோடி அங்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பிறகு அங்கிருந்து முக்திநாத் செல்கிறார். 

முக்திநாத்தில் இருந்து காத்மாண்டு செல்லும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச உள்ளார்.  மூன்று ஆண்டுகளில், பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். 

புதிய ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்திட்டம், பீகார் ராக்ஸ்- நேபாளத்தின் காத்மண்டு இடையேயான ரயில் போக்குவரத்து திட்டம் உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், பின்னர் ஜனக்புர் நகர மேயர் ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேபாளம் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் மூலம் இருநாட்டிற்கும் இடையேயான உறவு மேம்படுத்தப்படும். நோபாளில் தற்போது புதிய மாற்றங்கள் நிகழ்ந்துவருகிறது. வளர்ச்சியை நோக்கிய நேபாளின் பயணத்தில் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று மோடி கூறினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close