கேரளாவில் சட்டபடி நடந்த முதல் திருநங்கை-திருநம்பி திருமணம்!

  டேவிட்   | Last Modified : 11 May, 2018 01:37 pm


நம் சமூகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நார்மல் மனிதர்களைக் காட்டிலும் பல மடங்கு துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் திருநங்கை/திருநம்பிகள். அவர்களை பிச்சை எடுக்க வேண்டாம் என சொல்லும் நாம் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதில் தவறி விடுகிறோம். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகம் போல் கடக்கும் இவர்களுக்கு, வாழ்க்கைத் துணை என்பது எவ்வளவு பெரிய விஷயம்? தன்னை முழுதாகப் புரிந்துக் கொண்ட ஒருவர், எல்லா கஷ்ட நஷ்டத்திலும் தோள் கொடுத்து வாழ்க்கைத்துணையாக வருவார் என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் பேரின்பமே! இப்படியான ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் இஷான் ஷான், பிறப்பில் பெண்ணான இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதே போல் கேரளாவிலுள்ள பிரபல தொலைக்காட்சியில் துணை நடிகையாக இருப்பவர் சூர்யா வினோத், ஆணாகப் பிறந்து திருநங்கையானவர். மூன்றாம் பாலினத்தை ஒதுக்கித் தள்ளும் இந்த சமூகத்தில் தான் இஷானும் சூர்யாவும் காதலித்து சட்டபடி திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். கேரளாவில் சட்டபடி நடந்த முதல் திருநங்கை-திருநம்பி திருமணம் இவர்களுடையது தான். 

ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவருக்கான தனி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று பலரின் கவனத்தை சூர்யா பெற்றிருந்தார். தற்போது கேரளாவின் முதல் மாற்றுப் பாலின தம்பதி என்ற அந்தஸ்தையும் இஷான்- சூர்யா ஜோடி பெற்றுள்ளனர். ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் சட்டத்தின் கீழ் இந்தத் திருமணம் நடந்துள்ளது. இப்போது இந்த புரட்சி திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.   

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close