திருப்பதியில் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு; பா.ஜ.கவினரை தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர்!

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 12:12 pm


திருப்பதியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது முன்னிலையிலேயே பா.ஜ.கவினரை தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கியுள்ளனர். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடகத் தேர்தல் நாளை (மே.12) நடைபெற இருக்கிறது. நேற்று பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். நேற்றுடன் பரப்புரை முடிவடைந்துள்ளதையடுத்து இன்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் திரும்பிய நேரத்தில், அவரது காரின் பின்னால் வந்து தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அமித் ஷாவின் கண் முன்னாகவே பா.ஜ.கவினரையும் தாக்கியுள்ளனர். இருதரப்பினரிடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து போலீசார் வந்து அவர்களை கட்டுப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகக்கூறி இதுவரை மத்திய அரசு அதனை நிறைவேற்றாததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close