கோவிலில் நாக்கை அறுத்துக்கொண்ட பெண்!

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 10:59 pm

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு சென்ற பெண் பக்தர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள மொரெனா மாவட்டத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்த குத்தி தோமார் என்ற பெண், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அங்குள்ள துர்கை கோயிலுக்கு சென்று வந்துள்ளார். துர்கையின் தீவிர பக்தையான தோமார், கடந்த புதன்கிழமை வழக்கம் போல் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தமது நாக்கை அவர் அறுத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வேண்டுதலுக்காக, தோமார் தமது நாக்கை அறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close