ஆந்திரா: கோதாவரி ஆற்றில் சென்ற சுற்றுலா படகில் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 01:10 pm


ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 120 பேர் சென்ற சுற்றுலா படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் கோதாவரி நதியைச் சுற்றியுள்ள இடங்களை பார்க்கச் செல்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நதிகளில் செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்துவதும் தற்போது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று கோதாவரி ஆற்றில் 120 பேர் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானது. சரியாக இன்று மதியம் 12 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முதற்கட்டமாக பயணிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர், மீட்புப்பணியினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படகில் ஏற்பட்ட மின்கசிவினால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதாவரி நதியில் சட்டவிரோதமாக படகுப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close