தந்தையின் சிகிச்சைக்காக குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி நின்ற மகள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 May, 2018 09:10 pm


தனது தந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி நிற்கும் சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அவுரங்காபாத் பட்ஜியை சேர்ந்தவர் ஏக்நாத் கவாலி. இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின் ஏக்நாத்க்கு குளுக்கோஸ் போடப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிடும் கம்பி இல்லை. அதனால் ஏக்நாத் கவாலியின் 9 வயது மகளிடம் அந்த குளுக்கோஸ் பாட்டிலை கொடுத்து தாங்கி பிடித்து நிற்குமாறு மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.


இதையடுத்து அந்த சிறுமியும் தந்தை உடல்நலம் சீராக வேண்டும் என்பதற்காக் குளுக்கோஸ் பாட்டிலை அரைமணி நேரம் கையில் தாங்கி பிடித்தப்படி நின்றுள்ளார். மருத்துவமனையிலிருந்த சிலர் சிறுமியின் செயலை பார்த்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  

இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் கண்ணன் எடிகர் கூறுகையில்,  “சிறுமி சில நிமிடங்களே கையில் குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி நின்றார். உடனடியாக ஸ்டேண்டு கொண்டு வரப்பட்டது குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. சிறுமியை அவ்வாறு நிற்க வைத்த மருத்துவமனை ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனி நடைபெறாது” என கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close