நீதிபதி ஜோசப்பின் பெயரை கொலீஜியம் மீண்டும் பரிந்துரை செய்ய முடிவு!

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 05:39 pm


உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதிபதி ஜோசப்பின் பெயரை மீண்டும் பரிந்துரை செய்ய கொலீஜியம் முடிவு செய்துள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு இரண்டு பேரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரை செய்தது. அவற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவர் கடந்த ஏப்ரல் 27ம் தேதி பதவியேற்றுவிட்டார்.

அதே நேரத்தில் உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப் நியமனம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. நீதிபதியாக பதவி வகித்த அனுபவம் இருந்தும் ஜோசப்-க்கு நியமனம் வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது. இந்த விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் கூடி ஆலோசனை நடந்தது. கொலிஜியத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் உள்ளனர். 

அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில்,  நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் கொலீஜியம் பரிந்துரை செய்ய கொலீஜியம் முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆலோசனைகூட்டம் மே  16ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஜோசப் பெயர் பறித்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  இன்றைய கொலிஜிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close