10 நிமிடங்களுக்கு மட்டுமே நமது நட்பு - கிரண்பேடி vs நாராயணசாமி

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 08:54 pm


புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான நட்பு 10 நிமிடங்கள் மட்டுமே எனக்கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் 53வது கம்பன் விழா தொடக்கவிழாவில் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டார். விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தான் பேசுவதை மொழிபெயர்க்க முதலில் கல்வித்துறை அமைச்சரை அழைத்தார். அதன்பின் முதலமைச்சரை மொழிப்பெயர்க்க அழைத்தது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. உடனே மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாராயணசாமி, பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆளுநரின் பேச்சை மொழிப்பெயர்க்க சம்மதிக்கிறேன் என கூறினார்.

இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரின் உரையை மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது பேசிய ஆளுநர், அடுத்த 10 நிமிடத்துக்கு உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன். உங்களை இந்த 10 நிமிடங்கள் மட்டுமே நம்புவேன் என கூறினார். உடனே முதலமைச்சர் நாராயணசாமி ’நானும் அந்த 10 நிமிடம் வரை மட்டுமே உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்’ என கூறினார். இதற்கு பதிலளித்த கிரண்பேடி, "ஆனால் நான் இந்த நட்பு, காலம் முழுவதும் தொடர வேண்டும் என நினைக்கிறேன். எனது உரையை மொழிப்பெயர்த்த நாராயணசாமிக்கு நன்றிகள்" என கூறினார்.

முன்னதாக, ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதற்கிடையில் மேடையில் நடந்த இருவருக்குடனான இந்த கலகல பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close