போலி வாக்காளர் அட்டை விவகாரம்: கர்நாடகாவில் ஒரு தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 07:15 pm


கர்நாடகாவில் உள்ள ராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான சட்ட பேரவை தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 10,000 போலி வாக்காளர் அட்டைகள் பறக்கும் படையினரால் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநில போலீசார் மற்றும் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ராஜ ராஜேஸ்வரி நகர் வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலிறுத்தின. 

இந்நிலையில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை நடைபெறவிருந்த ஆர்.ஆர் தொகுதிக்கான வாக்குப்பதிவு 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 31ம் தேதி நடக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சரே வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவே, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இவை எல்லாம் பணம் தொடர்பான முறைகேடு. ஆனால், கர்நாடகாவில் போலீ வாக்காளர் அடையாள அட்டையை பிரிண்ட் செய்து, தேர்தலில் முறைகேடு செய்ய முயன்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close