‘தீவிரவாதத்தின் தந்தை' பாலகங்காதர திலகர் - பாடப்புத்தக்கத்தின் பதிவால் சர்ச்சை

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 05:38 am


ராஜஸ்தான் மாநில 8 வகுப்பு பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், ‘தீவிரவாதத்தின் தந்தை’ என அச்சடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதிர திலகர் ‘தீவிரவாதத்தின் தந்தை’ என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  8 வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் புத்தகத்தின் 267வது பக்கத்தில் 19ம் நூற்றாண்டின் தேசிய இயக்கத்தில் நடைபெற்ற சம்பவங்கள் என்ற பாடத்தின் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியவரும், தேசிய வாத இயக்கத்தின் விதையாகவும், தேசிய விடுதலைப் போராட்டராகவும் விளங்கிய பாலகங்காதர திலகர் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடித்த திலகரை ‘தீவிரவாதத்தின் தந்தை’ என குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close