சக்திவாய்ந்த ஆசிய பசிபிக் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்!

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 06:08 am


25 நாடுகள் கொண்ட ஆசிய பசிபிக் பகுதியின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்ததுள்ளது.

வரும் காலத்தில், இந்தியா மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் என்றும், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதன் முன்னேற்றம் நன்றாக தெரிவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த லவ்வி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வரும் இந்த ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்க, சீனா ஆகிய நாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பொருளாதார வளம், பாதுகாப்பு,  வருங்கால திட்டங்கள், கலாச்சார முக்கியத்துவங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close