நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 வேலைநிறுத்தம்!

  Sujatha   | Last Modified : 12 May, 2018 06:44 am


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக  48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம்  நவம்பர் மாதத்தில் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு(UFBU, IBA) பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அப்போது வெறும் 2% தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் மட்டும்  வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் தொழிலதிபர்களை  காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இதனை தொடர்ந்து நாடு முழுவதும், வருகிற மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி30ம் தேதி (புதன் கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கும் போராட்டம் தொடர்ந்து ஜூன் 1 (வெள்ளி கிழமை) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close