கர்நாடக தேர்தல்: மை விரலுக்கு மசால் தோசை, காபி இலவசம்!!

  Sujatha   | Last Modified : 12 May, 2018 07:15 am


கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக வாக்களிப்பவர்கள், மை தடவிய விரலை காண்பித்து இலவசமாக மசாலா தோசை, காபி பெறலாம் என பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறிவித்துள்ளது.   

கர்நாடகாவில் இன்று(சனிக்கிழமை) 224 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் மட்டும் 15.2 லட்சம் பேர் உள்ளனர். இதில் பிரச்னை என்னவெனில் 80% இளைஞர்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாற்றம் வர போவதில்லை என கருதி வாக்களிக்க மறுத்து வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

அதன் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்(நிசர்கா கிராண்ட் புயூர்) வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "வாக்களித்து விட்டு மை விரலை காட்டும் இளைஞர்களுக்கு சூடான காபியுடன், மசால் தோசை இலவசமாக வழங்கப்படும். மேலும், வாக்களித்து விட்டு வரும் அனைவருக்கும் பில்டர் காபி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது".

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close