கர்நாடகத்தில் வாக்கு பதிவு தொடங்கியது..

  Sujatha   | Last Modified : 12 May, 2018 07:37 am


கர்நாடகத்தில் இன்று(சனி கிழமை) காலை 7 மணி அளவில் சட்டசபை தேர்தல் தொடங்கியது. மொத்தம் 224 தொகுதிகள் உடைய இம்மாநிலத்தில்,   ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் மே 28 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளிலும் பொது மக்கள் வாக்களிக்க தொடங்கியுள்ளனர். 

மாநிலம் முழுவதும் 57,909 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மாலை 6 மணி வரை இந்த வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை வருகிற 15ம் தேதி வெளியிடப்படும்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close