இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரா?- உதவி கேட்ட மாணவரிடம் சுஷ்மா சுளீர்!

  Padmapriya   | Last Modified : 12 May, 2018 02:27 pm

பிலிப்பைன்ஸில் தங்கியுள்ள மாணவர் ஒருவர், தன்னிடம் கோரிய உதவிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உடனடியாக உதவியதோடு அவரின் தவறையும் திருத்த அறிவுரை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மருத்துவம் படித்து வருகிறார். மாணவரின் பெயர் சேயிக் அதீக், சுஷ்மாவின் ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு உதவி கேட்டிருந்தார். 

மாணவரின் ட்வீட்டில், "மணிலா நகரில் மருத்துவம் படித்து வருகிறேன். என் பாஸ்போர்ட் சேதம் அடைந்துவிட்டது. புதிய பாஸ்போர்ட்டிற்கு, ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பித்தேன். மருத்துவ பரிசோதனைக்காக, உடனடியாக வீடு திரும்ப வேண்டும். எனக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்யுங்கள். என்னால் இதற்கு மேலும் இங்கு செலவுகளை சந்திக்க முடியாது. உதவுங்கள்" என்று அந்த மாணவர் குறிப்பிட்டிருந்தார். 


ஆனால்,  அந்த மாணவர் தனது ட்விட்டரின் சுய அறிமுகப் பக்கத்தில் தன்னை 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரை' சேர்ந்தவன் என்று குறிப்பிட்டிருந்தார். 

அவருக்கு பதிலளித்த சுஷ்மா, "உங்களுக்கு உதவ நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதியை சேர்ந்தவன் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படி ஒரு பகுதியே இல்லை" என்று பதில் அளித்திருந்தார். 

பின் அதனைத் தொடர்ந்து, மாணவர் தனது சுயவிவரத்தை மாற்றிருந்தார். அதனை உடனடியாக கவனித்த சுஷ்மா, "உங்களது விவரத்தை திருத்தப்பட்டுள்ளதை பார்த்து நான் மகிழ்கிறேன்." என்று ட்வீட் செய்து அந்த மாணவருக்கு உதவும்படி, வெளியுறவுத் துறை அதிகாரி பெயரை குறிப்பிட்டி பதிந்திருந்தார். 

சுஷ்மா, வழக்கமாகவே ட்விட்டரில் உதவி கேட்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உடனடியாக பதிலளித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே..

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close