பெற்றோர்களை கொடுமைப்படுத்தினால் 6 மாத சிறைத்தண்டனை!

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2018 04:45 pm


60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொடுமைப்படுத்தினாலோ, கைவிட்டாலோ 6 மாத சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. 

இந்தியாவில் மூத்த குடிமக்களின் நலன் கருதி முதியோர்களுக்கான தேசிய கொள்கை 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம்' கடந்த 2007ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி அவர்கள் அரசின் மருத்துவம், பென்ஷன் உள்ளிட்ட வசதிகளை பெறுகின்றனர். அதன்பின்னரும் இந்த திட்டத்தில் முதியோர்களுக்கென பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ள பெற்றோர்களை கொடுமைப்படுத்தினாலோ அல்லது அவர்களை கைவிட்டாலோ அவர்களின் குழந்தைகளுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. 

இதையடுத்து சமீபத்தில் அந்த சட்டத்தில் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெற்றோர்களை கொடுமைப்படுத்தினால் 6 மாதம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் முன்னதாக மகன், பேரக்குழந்தைகள் மட்டும் இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அவர்களது மருமகள், மருமகன், மற்றும் வளர்ப்பு குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட யாரேனும்  மூத்த குடிமக்களை கொடுமைப்படுத்தினால் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு மாதம் ஒருமுறை அரசு சார்பில் நிதியளிக்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close