400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத கிராமம்!

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 06:28 am


மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 400 ஆண்டுகளாக பிரசவமே நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள சன்கா ஷ்யாம் ஜி கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகளாக பிரசவமே நடக்கவில்லை என கூறுகின்றனர் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள். எதற்காக இந்த விநோத பழக்கம் என கேட்டபோது, கடவுளின் சாபத்தினால் இங்கு இத்தனை ஆண்டுகளாக பிரசவம் நடக்கவில்லை என கூறுகின்றனர். 

இதுகுறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் நரேந்திர குர்ஜார் கூறுகையில், “16ம் நூற்றாண்டில் கோயிலில் கட்டுமான பணி நடைபெற்றபோது பெண் ஒருவர் அரவை கல்லில் கோதுமை அரைத்துள்ளார். அப்போது எழுந்த சத்தத்தில் கட்டுமானப் பணி பாதித்தடைந்துள்ளது. 


ஆலயப்பணி பாதிப்படைந்ததால் கோபமடைந்த அந்த கோவிலில் உள்ள தெய்வம் இந்த கிராமத்தில் பிறக்கும் எந்த குழந்தையும் தங்காது என சாபம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிடும் அல்லது பிறவி குறைப்பாடுகளுடன் பிறக்கும். இதனால் சுமார் 400 ஆண்டுகளாக கிராமத்தில் பிரசவம் நடப்பதில்லை.

கர்ப்பிணிகள் மருத்துவர்கள் கொடுத்த நாட்களுக்கு முன்னரே ஊரைவிட்டு வெளியேறிவிடுகின்றனர். திடீரென பிரசவலி ஏற்பட்டால் கிராமத்திற்கு வெளியே பிரசவம் பார்க்க தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் மட்டும் பிரசவம் நடக்க அனுமதிப்பது இல்லை. இன்றுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது’ என்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close