கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 07:05 pm


கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மிகவும் தீவர பாதுகாப்பில் நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 2,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடா வின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. மாலை 5 மணிவரை 64.35% வாக்குகள் பதிவாகின. இன்று பதிவான வாக்குகள் மே 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில்  70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close