கர்நாடக தேர்தலில் பா.ஜ.க-வுக்கே வெற்றி - கருத்துக்கணிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 09:26 pm


கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என்று பெரும்பான்மையான கருத்தக் கணிப்பில் தெரியவந்துள்ளது. சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே நாளிதழின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 106-118 இடங்களை பிடிக்கும் என்றும், பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்கவாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 22-30 இடங்களிலும், மற்றவை 1-4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

நியூஸ் எக்ஸ்: கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 72- 78 இடங்களிலும், பாஜக 102- 110 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 35-39 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

என்.டி.டி.வி: என்.டி.டி.வியின் கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 88 இடங்களிலும், பாஜக 98 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 33, மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

டைம்ஸ் நவ்: கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 90-103 இடங்களிலும், பாஜக 80-93 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 31-39 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. 

வி.எம்.ஆர்: வி.எம்.ஆர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, பாஜக 80 - 93, காங்கிரஸ் 90 - 103, மதசார்பற்ற ஜனதாதளம் 31 - 39, மற்றவை 2 - 4 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்சிஸ்: ஆக்சிஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி பாஜக 79 - 92, காங்கிரஸ் 106 - 118, மதசார்பற்ற ஜனதா தளம்  22 - 30, மற்றவை 1 - 4 இடங்களில் வெற்றிப்பெற வாய்ப்பு 

சி- ஓட்டர்: சி- ஓட்டர் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 97-108, காங்கிரஸ் 87-99, மதசார்பற்ற ஜனதா தளம்  21 - 30, மற்றவை 1 - 8 இடங்களில் வெற்றிப்பெற வாய்ப்பு.

எது எப்படியாக இருந்தாலும், இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போகும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டும்தான் பெரிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்பது மட்டும் தெரிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close