ராமாயண காலத்திலேயே தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தது- ஆளுநர் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 10:58 pm


அந்த காலத்திலேயே இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமாக இருந்தது என்பதற்கு, ராமர் கட்டிய சேது பாலமே சான்று என்று பஞ்சாப் ஆளுநர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், பஞ்சாப் ஆளுநர் விபி சிங்பத்நூர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “ராமாயண காலத்திலேயே அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கு கடலில் ராமர் கட்டிய சேது பாலமே சான்றாகும். அதுமட்டுமில்லாமல்  அனுமன், லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை கொண்டு வந்ததும் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது.

அந்த காலத்திலேயே அதிநவீன ஆயுதங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டன. இன்று இந்தியா மேலும் வளர்ச்சி அடைந்து தொழில்நுட்பத்தில் புரட்சி கண்டுள்ளது. அன்றே நாம் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது இதிகாசங்கள் வாயிலாக தெரியவருகிறது” என்றார்.

முன்னதாக மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட், தொலைத்தொடர்பு வசதிகள் இருந்ததாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close