கவலைப்படாதீர்கள், கருத்துக்கணிப்புகள் வெறும் பொழுதுபோக்கு தான்: சித்தராமய்யா

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 11:07 am

தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்புகள் வெறும் பொழுபோக்கு தான், அதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவிலுள்ள 222 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் வர்ணா தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்த சித்தராமைய்யா செய்தியாளர்களிடம் பேசயிபோது, ''கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அடுத்த அரசை பாஜக அமைக்கும், வரும் 17ந்தேதி முதல்வராகப் பொறுப்பேற்பேன் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். உண்மையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால்தான், இவ்வாறு அவர் பேசுகிறார். 60 – 65தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெறும்.

தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் வருமான வரி சோதனை என்ற பெயரில் காங்கிரஸ் தொண்டர்களை அச்சுறுத்துகின்றனர். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து குரல் எழுப்புவோம்.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா நகைச்சுவை நடிகராகிவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. அவரது பேச்சுகள் வெறுமையாக உள்ளன. அவை கர்நாடக வாக்காளர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே, இதுகுறித்து நாங்கள் கவலைகொள்ளவில்லை என்றார்.

பின்னர் வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட சித்தராமைய்யா, இந்த கருத்துக்கணிப்புகள் குறித்து கவலைப்படாதீர்கள். வார இறுதியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். வாக்குபதிவுக்கு பிறகான கருத்துக்கணிப்புகள் வெறும் பொழுது போக்கு தான் என்று பதிவிட்டிருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close