லாலு பிரசாத் யாதவ் மகன் திருமணத்தில் உணவு திருட்டு

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 12:09 pm

லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிராதப்பின் திருமணத்தில் பந்தியில் ஏற்பட்ட தகராறின் போது சிலர் உணவு பொருட்களை திருடி சென்றுள்ளனர். 

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீகார் முன்னாள் முதலமைச்சர் தரோகா பிரசாத் ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயை கரம் பிடித்தார். இதில் கலந்து கொள்ள லாலு பிரசாத் யாதவ் பரோலில் வெளியே வந்துள்ளார்.

இந்த திருமணத்திற்காக 7 ஆயிரம் விருந்தினர்கள், 50 யானைகள், குதிரைகள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் விருந்து நிகழ்ச்சிக்காக வி.ஐ.பி.களுக்கான பந்தல் போடப்பட்டிருந்த பகுதியில் கூட்டம் கூடியதால் அங்கு சிலர் பந்திக்கு முந்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பந்தியில் இடம் கிடைக்காத கட்சியினர் சிலர் ஆத்திரத்தில் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். இன்னும் சிலர் அங்கு பரிமாற வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எடுத்துச்சென்றனர். மேலும் இந்த தகராறில் சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close