நாளை உறுதியாக காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும்: யு.பி.சிங்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 01:02 pm

நாளை உறுதியாக காவிரி வரைவு செயல் திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 3ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாமல் கர்நாடக தேர்தலை காரணம் காட்டி 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கியதோடு, விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தனர். தமிழகம் மற்றும கர்நாடகா இடையேயான இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், அமைச்சரவை ஒப்புதல் பெற்று நாளை வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் நிச்சயமாக வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டதா என்பதை தற்போது தெரிவிக்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close