2025ல் 18 லட்சம் இந்தியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவர் : ஆய்வில் தகவல்

Last Modified : 13 May, 2018 03:03 pm

2025ம் ஆண்டிற்குள்  18 லட்சம் இந்தியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவர் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்து மும்பையை சேர்ந்த அமைப்பு ஒன்று கணக்கெடுப்பு நடத்தியது.

இதில், நாட்டின் கிராமம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளிலும் தற்போது 13 லட்சத்து 72 ஆயிரத்து 885 பேருக்கு புற்று நோய் பாதிப்பு உள்ளது. 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17 லட்சத்து 96 ஆயிரத்து 975 ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் நகரப் பகுதிகளை விட கிராமப் புறங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில்தான் மிக அதிக அளவில் புற்று நோயாளிகள் உள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் கிராமங்களில் அதிக புற்று நோயாளிகள் உள்ளனர். 2025-ம் ஆண்டில் இதேநிலையில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தரபிரதேசத்தில் நகர பகுதிகளில் பெண்களை விட ஆண்களிடம் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் வருகிற 2020-ம் ஆண்டில் புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருக்கும். 2025-ம் ஆண்டில் 18 லட்சமாக உயரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது 2025-ம் ஆண்டிலும் தொடரும். இதேநிலை அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close