இங்கிலாந்து இளவரசர் திருமணத்தை கொண்டாடும் மும்பை டப்பாவாலாக்கள்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 07:11 pm

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்தை மும்பை டப்பாவாலாக்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட இருக்கின்றனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும், ஹாலிவுட் நடிகை மேஹன் மார்கலுக்கும் வரும் 19ந்தேதி லண்டனில் உள்ள விண்ட்சர் கேஸ்டில் அரண்மனையில் திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த பிரபல மும்பை டப்பாவாலாக்கள் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை, கே.இ.எம். மருத்துவமனை, வாடியா மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்று நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளனர்.

இது குறித்து மும்பை டப்பாவாலாக்களின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் நிருபர்களிடம் கூறியதாவது, டப்பாவாலாக்களாகிய எங்களுக்கும், இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இளவரசர் சார்லஸ் அவரின் 2வது திருமணத்துக்கு எங்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தார். நாங்கள் அங்கு சென்றிருந்த போது, எங்களை மிக சிறப்பாக கவனித்துக் கொண்டனர். மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள். வரும் 19ந் தேதி இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெற உள்ளது.

அதைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்க இருக்கிறோம். மேலும், இங்கிலாந்து தூதரகத்திலும் இளவரசர் ஹாரிக்காக சிறப்புப் பரிசுகளையும் அளிக்க இருக்கிறோம். இவ்வாறு சுபாஷ் தலேக்கர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close