இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் - சித்தராமையா அதிரடி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 May, 2018 03:29 pm


இனிவரும் தேர்தலில் போட்டிடமாட்டேன் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற 222 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற பிரசாரத்தின்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள், ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் நாங்கள் தான் வெற்றிப்பெருவோம் என கூவி கூவி வாக்கு சேகரிப்பதில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அரசியலில் தொடருவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார். மக்கள் தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக கட்சி தலைமை ஏற்றுக் கொண்டால் எனக்கு சம்மதம்தான்” என தெரிவித்துள்ளார். 

மீண்டும் முதலமைச்சராவேன் என கூறிகொண்டிருந்த சித்தராமையாவிற்கு திடிரென என்ன ஆனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close