125 முதல் 130 இடங்களில் வெற்றி: எட்டியூரப்பா சூளுரை

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 03:32 pm

 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 125 முதல் 130 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெரும் என முன்னாள் முதல்வர் எட்டியூரப்பா கூறியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலின் எக்சிட் போல் முடிவுகளில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெரும் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரவேண்டும் என மக்கள் பெரிதும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பாலான எக்ஸிட் போல்களில், தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்தை குறிப்பதாகவும்,  பாரதிய ஜனதா அதிக இடங்களை பெரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"எக்சிட் போல் கருத்துக்கணிப்புகளை நான் பார்த்துள்ளேன். பாரதிய ஜனதா 125 முதல் 130 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 70 இடங்களை வெல்லலாம். ஜனதா தளம் சுமார் 25 இடங்களை கைப்பற்றும். கர்நாடகாவில் ஒரு அமைதியான பாரதிய ஜனதா அலை உருவாக்கி வருகிறது. சித்தராமையா அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்" என்றார் எட்டியூரப்பா.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close