ஆக்கிரமிப்பு அகற்ற துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 05:01 pm


ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில், சில தினங்களுக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், காயமடைந்த மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் கசுலி பகுதியில், இரண்டு வாரங்களுக்கு முன், சர்ச்சைக்குரிய ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நீக்க அதிகாரிகள் சென்றிருந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 13 ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளை அகற்ற அவர்கள் சென்ற நிலையில், அதிகாரிகளுடன் ஒரு ஓட்டலின் உரிமையாளர் விஜய் சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் திடீரென அவர் தனது துப்பாக்கியை எடுத்து, அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுட்டார். பதற்றமடைந்த அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓட, அவர்களை விடாமல் துரத்தி சென்று விஜய் சிங் சுட்டார். அதில் மூத்த பெண் அதிகாரி ஷைலா பாலா பலியானார். அவருடன் சென்றிருந்த குலாப் சீங் என்ற பொதுப்பணித்துறை அதிகாரியும் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close