சிதம்பரத்தின் 'நவாஸ் ஷரீப் மொமண்ட்': அமைச்சர் நிர்மலா சீதாராமன் நறுக்!

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 06:52 pm


முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது காங்கிரஸ் கட்சியின் 'நவாஸ் ஷரீப்' தருணம் என விமர்சித்தார். 

இவ்வளவு சர்ச்சைகள் இருந்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதற்காக பா.சிதம்பரத்தின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். 

"பல மாதங்களாக நாம் பா.சிதம்பரத்தின் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வருமான வரித்துறை அவர் மீது நடத்தி வரும் விசாரணை குறித்து ஊடகங்கள் மூலமாக கேட்டு வருகிறோம். இது காங்கிரஸ் கட்சியின் 'நவாஸ் ஷரீப்' தருணம் போல தெரிகிறது. பாகிஸ்தான் ஆளும் கட்சி, தங்கள் பிரதமர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  அதற்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

பா.சிதம்பரம், ஒன்று அல்லது பல நாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்ததாக விசாரணை நடந்து வருகிறது. கருப்பு பணம் சொத்துக்களை பதுக்கி வைத்தது என பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கியுள்ளார்" என அமைச்சர் சீதாராமன் கூறினார். 

மேலும், "காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அவரே நிதி மோசடி விவகாரத்தில் பெயிலில் வந்துள்ளார். அவர் மக்களிடம் தெளிவாக சிதம்பரத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என மக்களுக்கு சொல்ல வேண்டும்" என்றும் சீதாராமன் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close