13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்! ஆந்திராவில் நடந்த கொடுமை

Last Modified : 14 May, 2018 04:35 am


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக, ஒரு தாய், 13 வயதேயான மகனுக்கு, 23 வயது பெண்ணுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவின் குர்நூல் பகுதியின் உப்பரங்கல் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், நோயால் அவதிப்பட்டு வந்துள்ள காரணத்தால், தனது 13 வயது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாய குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் தனது மகனை மணம் முடிக்க சம்மதித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த திருமணம், உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அந்த பகுதியை சேர்ந்த சில நிருபர்களும் திருமணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் லீக்கானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அந்த சிறுவனை மீட்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

"இந்த திருமணம் சட்டப்படி செல்லாது. சிறுவனையும், அந்த பெண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை எங்களிடம் ஒப்படைக்க 2 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். இல்லையென்றால், பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்" என்றார் தாசில்தார் ஸ்ரீனிவாச ராவ்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close