வெளிநாட்டு பயணிகள் 1 ஆண்டுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு!!

  Sujatha   | Last Modified : 14 May, 2018 06:39 am


இந்திய ரயில்வே துறை, வெளிநாட்டு பயணிகள் இனி  365 நாட்களுக்கு முன்பாகவே ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ரயில்களில் டிக்கெட் புக் செய்யலாம் என அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், இது வரை 4 மாதங்களுக்கு(120 நாட்களுக்கு) முன்பே ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ரயில்களில் டிக்கெட் புக் செய்து வந்த வெளிநாட்டு பயணிகள், இனி 1 ஆண்டுக்கு(365 நாட்களுக்கு) முன்பாகவே பதிவு செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close