உ.பி, உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல்: ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த மோடி, ராம்நாத் கோவிந்த், ராகுல்

  Sujatha   | Last Modified : 14 May, 2018 07:53 am


உ.பி, மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி  உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வடமாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, புழுதி புயல்,  மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். உபியில் ஏற்பட்ட புழுதி புயலுக்கு 18 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் மின்னல் தாக்கி 9 பேரும், டெல்லியில் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து மோடியின் ட்விட்டர் பதிவு: "நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவு: "நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு: "மின்னல் தாக்கியதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 பேர் பலியானது அறிந்து வருந்தினேன். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்பு அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close