கர்நாடகாவில் 2 தொகுதிகளில் இன்று மறுவாக்கு பதிவு

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 09:48 am

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு இயந்திர குளறுபடிகள் புகார்களுக்கு உள்ளான 3 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்கு இயந்திரங்கள் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்ததால், பெங்களூரில் உள்ள ஹெப்பல் தொகுதிக்குட்பட்ட லொட்டேகொல்லஹல்லி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதேபோல், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, குஸ்ட்டாகி தொகுதிக்கு உட்பட்ட இரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த மூன்று வாக்குச்சாவடிகளிலும், இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு தொங்கு சட்டப்பேரவை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close