மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 04:39 pm


முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூர், தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

2014ம் ஆண்டு, டெல்லி நட்சத்திர ஓட்டலில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில், இன்று டெல்லி போலீசார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்ததாகவும், சசி தரூர் தற்கொலைக்கு தூண்டியதாகவும் இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எந்த ஆதாரமும் இல்லாமல் தன் மீது குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளதாக, சசி தரூர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளருடன் சசி தரூர் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, அந்த பெண்ணுடன் ட்விட்டரில் சண்டை போட்டார் சுனந்தா. அதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close