மோடி அரசின் விளம்பர செலவு எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 09:12 pm


மோடி தலைமையிலான பாஜக அரசு ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாயை விளம்பரத்துக்காக செலவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் அணில் கல்காலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி தலைமையிலான பாஜக அரசின் விளம்பர செலவு விவரத்தை வெளியிடுமாறு மனுத்தாக்கல் செய்தார்.


மத்திய நிதித்துறை ஆலோசகர் தபான் அளித்த பதில்மனுவில், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசு நாளேடுகளில் விளம்பரத்துக்காக ரூ.424.85 கோடியும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட மின்னணு விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடியும், விளம்பரப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரத்துக்காக ரூ.953.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 2015-16- ஆண்டுக்கான நாளேடுகளுக்கு- ரூ.510.69 கோடியும், மின்னணு ஊடகங்கள்- ரூ.541.99 கோடியும், வெளிப்புற விளம்பரங்கள்- ரூ.118.43 எனமொத்தம் ரூ.1,171.11 கோடி செலவிடப்பட்டது.


2016-17ம் ஆண்டிற்கான நாளிதழ்கள் செலவுகள்- ரூ.463.38 கோடி, மின்னணு விளம்பரங்கள்- ரூ.613.78 கோடி, வெளிப்புற ஊடகங்கள்-ரூ.185.99 கோடி என ரூ.1,263.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் மாதம் வரை, மின்னணு ஊடங்களுக்கு ரூ.475.13 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டது. தினசரி விளம்பரத்திற்காக ரூ. 333.23 கோடியை செலவிடுவதாக தெரிவித்துள்ளது.

மொத்தமாக 4 வருடங்களுக்கு சேர்த்து மோடி அரசு ரூ. 4300 கோடியை விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close