நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது குற்றப்பத்திரிகை

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 06:35 pm


பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் தொழிலதிபர் நிரவ் மோடி செய்த சுமார் ரூ.13,000 கோடி மோசடி விவகாரத்தில், மத்திய புலனாய்வுத்துறை இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதில் தொழிலதிபர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன், இணை இயக்குனர்கள் ப்ரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண், சர்வதேச தொடர்புகளுக்கான பொது மேலாளர் நெஹல் அஹாத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உஷா, தற்போது அலஹாபாத் வங்கியின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக இருந்த 2015-17 ஆண்டுகளுக்குள் இந்த மோசடி நடந்திருப்பதால் அவருக்கு இதில் பங்கு உள்ளது என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு அவசர கூட்டத்தை அழைத்து, ப்ரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் ஆகியோரை பணி நீக்கம் செய்தது. 

உஷா அனந்தசுப்பிரமணியன், தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close