சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜெட்லி நலம்

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 08:33 pm


உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக உள்ளார்.

65 வயதான மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த சிலவாரங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். ஏப்ரல் மாதம் முதல் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே தனது பணிகளை செய்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். காலை துவங்கிய அறுவை சிகிச்சை மதியம் வரை சென்றது. சிகிச்சைக்கு பின் ஐ.சி.யு-வில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். 

தீவிர கண்காணிப்பிற்கு பிறகு, அவர் தற்போது தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெட்லியின் தூரத்து உறவினர் பெண்,  தனது சிறுநீரகத்தை அவருக்கு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close