ஸ்மிருதி இரானி பதவியை பறித்த பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 03:34 am


மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிருதி இரானி தூக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் ஸ்ம்ருதி இரானியிடம் இருந்து தகவல் ஒலிபரப்புத்துறை பறிக்கப்பட்டுள்ளது.

அதை தகவல் தொழில்ஒலிபரப்புத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தான் ரத்தோர் பார்த்துக்கொள்வார். ஸ்மிருதி இரானி மத்திய ஜவுளித்துறை அமைச்சராக நீடிப்பார்.

மேலும், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம், நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி குணமாகி வரும் வரை இந்த பொறுப்பை அவர் வகிப்பார். 

சில வாரங்களுக்கு முன்பு, பத்திரிகைகளுக்கு தணிக்கை கொண்டுவர ஸ்மிருதி இரானி முயற்சி செய்தார். நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை கிளப்பியது. கர்நாடக தேர்தல் நேரத்தில் இது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி, உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அறிவிப்பை வாபஸ் பெற்றார்.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், திரைப்பட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்குவதற்கு பதில், ஸ்மிருதி இரானியே வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதுவும் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஸ்மிருதி இரானியிடமிருந்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close