கர்நாடகாவில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 08:08 am

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 220 தொகுதிகளுக்கான தேர்தல் 12ந்தேதி நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு இடையே ஆட்சியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்த தேர்தலில் மொத்தம் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. 

ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர். வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இன்று பகல் 12 மணியளவில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்படுவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள நாடே ஆவலோடு காத்திருக்கிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close