கர்நாடக தேர்தல்: முக்கிய வேட்பாளர்களின் நிலவரம்

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 01:04 pm

நாடு முழுவதும் எதிர்பார்த்து  காத்திருக்கும் கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு நிலவரம்..

**  சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாலிய கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி!

**  பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா சிக்கரிபுர தொகுதியில் வெற்றி பெற்றார். 

** கொல்லேகல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் என். மகேஷ் வெற்றி பெற்றார்.  

** கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா போட்டியிட்ட இரண்டு  தொகுதிகளிலும் பின்னடைவு

** ராம்நகரா தொகுதியில் மிக குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் குமாரசாமி முன்னிலையில் உள்ளார். 

** திர்த்தஹல்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அரகா ஞானேந்திரா வெற்றி பெற்றார். 

**  பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா சிக்கரிபுர தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

** ஹரப்பனஹாலி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கருணாகர ரெட்டி முன்னிலையில் உள்ளார். 

** பெல்லாரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சன்னா பக்கிரப்பா முன்னிலையில் உள்ளார். 

** முன்னாள் முதல்வரும் பா.ஜ.க வேட்பாளருமான ஜகதீஷ் செட்டர் ஹம்மலி தர்வத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 

** எலகங்கா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உமாநாத் கோட்டையன் வெற்றிப்பெற்றார். 

** ராமநகரா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட 7 ஆயிரம் வாக்குகள் முன்னிலை உள்ளார். மேலும் அவர் போட்டியிட்ட சென்னபடனா தொகுதியிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

** சித்தராமைய்யாவின் மகன் வருணா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 

** பீடர் தொகுதியில் காங்கிரசின் ரஹிம் கான் முன்னிலை பெற்று வருகிறார். 

** பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா சிக்கரிபுர தொகுதியில் 3,420 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

** கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா அவர் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். மேலும் பாதமி பகுதியில் முன்னிலையில் உள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close