கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சதானந்த கவுடா

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 11:02 am

கர்நாடகாவில் பா.ஜ.க முன்னிலை பெற்று வரும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணிக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் பா.ஜ.க 108 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. 

இதுகுறித்து பேசிய பா.ஜ.கவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா அக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close