கர்நாடகாவில் கால் பதிக்கும் பா.ஜ.க! பெரும்பான்மை இடங்களில் வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2018 11:08 am


கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மையான 113 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. 

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்த நிலையில், தொடர்ந்து பா.ஜ.க ஏறுமுகம் கண்டது. காலை 9.30 மணி அளவில்  பா.ஜ.க 95 இடங்கள், காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 இடங்களில் முன்னிலை பெற்றன. 

இதையடுத்து பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.  முதற்கட்டமாக மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்என்ற நிலையில் இருந்து தளர்ந்து தற்போது பா.ஜ.க பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. இதன்மூலமாக பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. அக்கட்சியின் தலைவர்கள் சொன்னதுபோல் தென்னிந்தியாவில் பா.ஜ.க காலூன்றி உள்ளது. இது பா.ஜ.கவின் மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

For LiveUpdates: http://www.newstm.in/National/1526353769976?Karnataka-Election-Live-Update

Advertisement:
[X] Close