வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.கவை முந்தியது காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 02:26 pm

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பா.ஜ.கவை விட வாக்கு சதவீதத்தில் முன்னிலை பெற்றது. 

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த 12ந்தேதி நடைபெற்றது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. பா.ஜ.க. 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 72 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலைியில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. 

நாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாட துவங்கி விட்டனர். 

பா.ஜ.க வெற்றி பெற்றாலும் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. எப்போதும் வெற்றி பெறும் கட்சிதான் வாக்கு சதவீதத்திலும் முன்னிலை பெறும். ஆனால் தற்போது அதற்கு எதிர்மறையாக நடந்துள்ளது. 

நண்பகல் 2 மணி நிலவரப்படி, 

காங்கிரஸ் - 37.9% வாக்குகள் ( 11,743,870 ) 

பாஜக - 36.4% வாக்குகள் ( 11,286,746 ) 

மதசார்பற்ற ஜனதா தளம் - 18.1% வாக்குகள் (5,597,713)

அதிக வாக்குசதவீதம் வைத்திருந்தும் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறமுடியாதது காங்கிரஸ் கட்சியினருக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. 

சில பெரிய தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் வெற்றி பெற்ற பல தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. பாஜக குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றி வாக்குகளை மட்டும் பல இடங்களில் பெற்று வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரஸ் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close