வாட்டாள் நாகராஜின் வேட்டியை உருவிய கர்நாடக தேர்தல்!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 08:16 pm


கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று, வாக்குபதிவு நேற்று நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க முன்னிலை பெற்று வந்தாலும் தனிபெரும்பான்மையை ஆட்சியமைக்கும் நிலையை இழந்தது. இந்நிலையில் கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் படுதோல்வி அடைந்துள்ளனர். 

இந்த தேர்தலில் தமிழர்களை கண்டாலே எரிந்துவிழும் வாட்டாள் நாகராஜ் தோல்வி அடைந்ததுடன் டெப்பாசிட்டையும் பறிகொடுத்துள்ளார். சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்ட ரங்க ஷெட்டி 75,963 வாக்குகள் பெற்று வெற்றி கண்டுள்ளார். வாட்டாளை கலாய்த்து சோஷியல் மீடியாவில் மீம்ஸ் வந்துகொண்டிருக்கிறது.

இதற்கு கன்னட ஆதரவாளர்களும் பதில் அளித்துள்ளனர். தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிடுவதாக கூறப்படும் வாட்டாள் நாகராஜ் தமிழர்கள் அதிகமுள்ள சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றியா கிடைக்கும் என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்துவருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close